நிபா வைரஸ் அச்சம்: கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு; கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக கோவை-கேரளா எல்லையில் 11 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு. கோவை மண்டல கல்லூரிகளுக்கு கேரளா சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டதை அடுத்து, கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை-கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தா வளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுகள் உள்ளிட்டோர் முழு கவச உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் உள்ளேயும், டயர்களிலும் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் எதிரொலியால் கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை இன்று ஜூலை 24 அனுப்பியுள்ளது. அதில் கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...