கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், உயர் மின்சார பகுதிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மின்சாதனங்களைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக்கூடாது.

வெள்ள அபாயம் அல்லது பிற இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்புவோர் இதே எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...