குறைந்தபட்ச ஊதியம் கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் ஏஐடியுசி சார்பில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரும், வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

கிராம உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என 2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

முன்தேதியிட்டு நிலுவையிலுள்ள பணப்பலன்களை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கோவை தொழிலாளர் கூடுதல் இணை ஆணையரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மனு அளித்த பின்னர் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...