கோவையில் 8வது புத்தகத் திருவிழா: ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறுகிறது - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் 8வது புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 250 அரங்குகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் 8வது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 250 அரங்குகளில் இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

புத்தகத் திருவிழாவை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைக்க உள்ளனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

விழாவில் தினந்தோறும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்துகொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள், சிறப்பு நிகழ்ச்சிகள், கவி அரங்கம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, நாடகம், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, "சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் 10 நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...