கோவை கோட்டைமேடு மன்பஉல் உலூம் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த எல்கேஜி குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று ஜூன்.20 முதல் எல்கேஜி வகுப்புகள் துவங்குகின்றன. அதன்படி முதல் நாள் வகுப்புகளுக்கு வருகை புரிந்த குழந்தைகளுக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

மேலும் மிக்கி மவுஸ் உடைகள் அணிந்தும் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிக்கப்பட்டு முகமூடிகள் அணிவிக்கப்பட்டன. மேலும் பள்ளி வகுப்புகள் துவங்கியதும் பெற்றோர்கள் புறப்பட்டு சென்றதை தொடர்ந்து குழந்தைகள் பலரும் அழுவதற்கு ஆரம்பித்து பெற்றோருடன் செல்வதற்கு அடம் பிடித்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்கள் சமாதானப்படுத்தி அமர செய்தனர். சில குழந்தைகள் உற்சாகமாய் சக குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...