கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தொல்லை - நடவடிக்கை எடுக்க ஊழியர்கள் கோரிக்கை

பாம்புகள் அடிக்கடி தென்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர் மண்டி உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதே சமயம் பின்புறம் புதர் மண்டி காணப்படுகிறது. குறிப்பாக மாவட்ட கருவூலம் உள்ள ஓய்வூதியர் பிரிவு பகுதி மற்றும் தேநீர் அருந்தும் இடம் போன்ற பகுதிகளை ஒட்டிய இடங்களில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பதுங்கிக் கொள்ளும் அளவிற்கு புதர் மண்டி காணப்படுகிறது.

இங்கே தேநீர் அருந்தும் இடத்திலும் அந்த கடைக்குள்ளும் பெரிய பாம்புகள் பிடிபட்ட நிகழ்வுகளும் உண்டு. இத்தகைய சூழலில் மாவட்ட கருவூலத்தின் ஓய்வூதியர் பிரிவில் அலுவலகப் பணி செய்யும் இடத்திற்குள் ஜன்னல் மீது மிகப்பெரிய நீளமான பாம்பு ஒன்று அண்மையில் தென்பட்டது. ஆட்களை கண்டதும் நகர்ந்து சென்று அருகில் உள்ள அறை வழியே சென்று பதுங்கிக் கொண்டது.

இவ்வாறு பார்ப்பதற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையான பெரிய அளவிலான பாம்புகள் அடிக்கடி தென்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதர் மண்டி உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், ஊழியர்களும் தற்போது ஜூன்.19 கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே பணி செய்யும் சூழலை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...