கோவையில் காவல்துறை உடை அணிந்து பலரை ஏமாற்றிய போலி பெண் காவலர் கைது

செல்வபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை வாங்கிவிட்டு சரியாக ஈஎம்ஐ கட்டமால் இருந்த போலி பெண் காவலர் அம்பிகா என்பவரையும், அவரது நண்பர் ரகுவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, செல்வபுரம் பகுதியில் பழைய இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் தினேஷ் என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனம் ஒன்றை அம்பிகா வாங்கி உள்ளார். இருசக்கர வாகனத்தை வாங்கும் பொழுது தான், பெண் காவலர் எனக் கூறி காவல் துறை அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார்.

மேலும் இருசக்கர வாகனத்தை வாங்கியதற்கு முறையாக ஈஎம்ஐ செலுத்தாமல் இருந்த நிலையில், வாகனத்தை விற்ற தினேஷ் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தார். அப்போது அம்பிகா என்ற பெயரில் பெண் காவலர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் வாகன விற்பனையாளர் தினேஷ் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி பெண் காவலர் அம்பிகாவையும், அவரது நண்பர் ரகு என்பவரையும் நேற்று ஜூன்.13 கைது செய்தனர். காவல்துறை உடை அணிந்து பலரையும் பெண் போலீசார் என கூறி அம்பிகா பலரையும் ஏமாற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் செல்வபுரம் போலீசார் தற்போது ஜூன்.14 விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...