கோத்தகிரியில் காரை காட்டு யானைகள் முட்டி தள்ளியதில் எஸ்.ஐ காயம்

கோத்தகிரி வியூ பாயிண்ட் அருகே சாலையின் குறுக்கே நின்றிருந்த இரண்டு யானைகள், அவ்வழியாக வந்த டூவீலரின் ஹாரன் சத்தத்தால் மிரண்டு போயின. பின்னர், அங்கு நின்றிருந்த காரை இரண்டு காட்டு யானைகளும் சேர்ந்து முட்டி தள்ளின. இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் மனோகரன் காயமடைந்தார்.


கோவை: மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியின் ஒருபுறம் இருந்து மற்றொரு பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி இடம்பெயர்வது வழக்கம். இந்த நிலையில் சமீப காலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.



இதனால் வனத்துறையினர் இரவு நேரங்களில் கூடுதலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்னாள் ஜூன்.10 இரவு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட் கருப்பன் ஓலை பகுதியைச்சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் மனோகரன்(52) என்பவர் தற்செயல் விடுப்பு எடுத்து தனது மகன் அன்பரசன்(24) உடன் தனக்கு சொந்தமான காரில் கோவை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, கோத்தகிரி வியூ பாயிண்ட் அருகே சாலையின் குறுக்கே நின்றிருந்த இரு யானைகளை கண்ட அவர் காரை நிறுத்திவிட்டு அங்கேயே நின்றுள்ளார். அப்போது,மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற டூவீலரின் ஹாரன் சத்தத்தால் மிரண்டு போன இரண்டு காட்டு யானைகளும் காரை தந்ததால் குத்தி கவிழ்த்துள்ளது.



இதனால் கார் கவிழ்ந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மனோகரன் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார்.இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரமாக போராடி இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மனோகரனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்பினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...