கோவை உக்கடத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் அருகாமையில் இஸ்ரேல் அரசின் போர் செயல்பாட்டைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போர் நடவடிக்கைகளை நிறுத்தி பாலஸ்தீன மக்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர்.


கோவை: கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில், கோவை மாவட்டம் சார்பாக பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.7 ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் அன்சாரி கண்டன உரையாற்றினார்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள்போரில் காயம் அடைந்தது போல் கை, கால், தலைப்பகுதிகளில் இரத்த கட்டு அணிந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பாலஸ்தீன் தெற்கு எல்லையில் ரஃபா பகுதியில் பொதுமக்கள் கூடாரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கின்ற போது அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி குழந்தைகள் உட்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்த இஸ்ரேலின் செயல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

ரஃபா எல்லையில் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் (ICJ) அறிவித்த பிறகும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலை ஈடுபடும் இஸ்ரேலுடன் தூதராக உறவை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பாலஸ்தீன நாட்டை இதுவரை 140 நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ள வேலையில் பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்கப்படவும், தன்னாட்சி பெற்ற பலஸ்தீனம் இயங்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...