கோவைப்புதூரில் டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்ற நபரை மறித்து, மதுகுடிக்க பணம் தருமாறு மிரட்டி ரூ.700 ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 கோவைப்புதூருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்றார். அப்போது அவரை மறித்த 2 பேர் கார்த்திக்கிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர்.

அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 700ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் இது குறித்து கார்த்திக், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்தது, சுண்டாக்காமுத்தூரை சேர்ந்த மீன் வியாபாரி பூவேந்தன்(22) மற்றும் சுகுணாபுரம் மைல்கல்லை சேர்ந்த பெயிண்டர் சுதீர்பாபு(45) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...