உலியம்பாளையத்தில் வீட்டின் ஓட்டை பிரித்து நகை, பணம் திருட்டு - மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை

உலியம்பாளையத்தை அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருக்கும் ஞானசுந்தரம் என்பவரின் வீட்டின் ஓட்டை பிரித்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையத்தை அடுத்த குப்புசாமி வீதியில் குடியிருப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். விடுமுறை தினம் என்பதால் இவரது மனைவி, மகன் ஆகியோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

நேற்று மதியம் அவர்களை அழைத்து வர குமார் தன் வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று மே.21 காலை 7 மணி அளவில் தன் மனைவி குழந்தைகளுடன் தன் வீட்டை வந்து திறந்து பார்த்த போது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்தன.

மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை, பணம் காணாமல் போயிருந்தது. வீட்டின் பின் பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு வீட்டில் மலம் கழித்து விட்டு மர்ம நபர் சென்றுள்ளார்.

உடனடியாக இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...