மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு - இன்று ஒரு நாள் மட்டும் ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. இதனால், மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை, ரயில்வே நிர்வாகம் இன்று (மே.18) ஒரு நாள் மட்டும் ரத்து செய்துள்ளது.


கோவை: கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று மே.17ம் தேதி இரவு பெய்த தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.



தொடர்ந்து ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை, ரயில்வே நிர்வாகம் இன்று (மே.18) ஒரு நாள் மட்டும் ரத்து செய்தது.



மேலும் வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரெயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மலை ரெயிலில் சுற்றுலா பயணம் செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...