திருப்பூரில் மாட்டு சாணத்தை கஞ்சா என விற்பனை செய்த 4 பேர் கைது

மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கஞ்சா என ஏமாற்றி விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் - மங்கலம் சாலை, பழக்குடோன் பகுதியில், மத்திய போலீஸ் நிலைய ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கஞ்சா போன்ற பொட்டலம் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்களது பெயர் லோகநாதன்(22), உமா மகேஸ்வரன்(21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், மங்கலம் சாலையில், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து பிரித்து பார்த்த போது மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கஞ்சா என விற்று மோசடி செய்ததாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கேவிஆர் நகரை சேர்ந்த சாரதி(21), கவின்(22) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...