குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர்கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (02.05.2024) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் , கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 1 நகராட்சி, 11 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 5 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் கிடைத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இப்பகுதிக்கான அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதிதாக ஆழ்குழாய் அமைக்கவும் மற்றும் பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்யவும் மற்றும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான இடங்களில் தண்ணீர் பந்தல் கூடுதலாக அமைத்திடவும் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முறையாக கண்காணித்திடவும் மற்றும் தண்ணீர் பந்தல்களை சுகாதாரமாக வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கோடை வெயிலின் தாக்கம் குறித்து கோடை வெயிலில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள், நகராட்சி ஆணையர்கள், மண்டல இயக்குநர்கள்(நகராட்சி நிர்வாகம்), உதவி இயக்குநர்கள்(பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...