கோவையில் EVM இயந்திரங்கள் பாதுகாப்பு - ட்ரோன்கள் பறக்கவிட தடை

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 



இந்த EVM இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதிகளில் ட்ரோன்களை இயக்க அல்லது பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையார்பாளையம், வடகோவை, ஆர் எஸ் புரம், பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி என் புதூர் மற்றும் இப்பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிக RED ZONE (NO FLY ZONE) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



அதன்படி (28.04.2024 காலை 06.00 மணி முதல் 02.05.2024 காலை 06.00 மணி வரை), 96 மணி நேரம் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...