குமரகுரு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட எரிசக்தி படகு சர்வதேச போட்டியில் மூன்றாவது முறையாக பங்கேற்பு

குமரகுரு கல்வி நிறுவனத்தின் குழு மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் 2024 இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்தியாவிலிருந்து ஒரே அணியாக பங்கேற்க தயாராகி வருகிறது. இந்த படகுப் போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியை (KCT) சேர்ந்த 12 மாணவர்கள் அடங்கிய சீ சக்தி குழு Monaco Energy Boat Challenge 2024 இல் பங்கேற்க ஐரோப்பாவில் உள்ள மொனாக்கோவுக்குச் செல்ல உள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று குமரகுரு சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில் சீ சக்தி குழுவின் செயல்பாட்டு தலைவர் மாணவி ஹேமலதா, பைலட் யுகபாரதி, கல்லூரி முதல்வர் எழிலரசி, மாணவர்கள் ரோஷன் மனோஜ், கிரிதேஷ் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு இதனை பற்றி விளக்கினர்.



இந்த நிகழ்வு இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்துறையினரை யாட்டிங் (Yachting) என ஒரு வித படகு துறையில் சுத்தமான ஆற்றலை (Clean Energy) பயன்படுத்தி உந்துசக்தி தொழில்நுட்பத்தை வடிவமைத்து வெற்றிகரமாக பயன்படுத்தி காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சீ சக்தி என்று பெயரிடப்பட்ட, குமரகுரு கல்வி நிறுவனத்தின் குழு மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் (MEBC) 2024 இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்தியாவிலிருந்து ஒரே அணியாக பங்கேற்க தயாராகி வருகிறது. இந்த படகுப் போட்டி ஜூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

பல்வேறு பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட KCT குழு, உலகெங்கிலும் உள்ள 21 அணிகளில் ஒன்றாக இந்த போட்டியில் ஆற்றல் பிரிவில் கலந்துகொள்கிறது.



சீ சக்தி குழுவினர் தாங்கள் உருவாகியுள்ள படகின் காக்பிட் மற்றும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி மிகவும் திறமையான மற்றும் நீடித்த உந்துவிசை அமைப்பை வடிவமைத்து உள்ளனர். தங்கள் படகை புதிதாக அவர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து அதற்கு யாலி 3.0 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படகு 18 நாட்ஸ் வேகத்தில் பயணித்து 25 நாட் வேகத்தை அடைகிறது. படகின் ஓட்டுநர் அமர்ந்து படகை இயக்கும் இடமான காக்பிட்டின் எடை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி இயற்கையான அன்னாசி நார்க்கு இடையில் கார்பன் ஃபைபர் எனும் வலுவான, கனமில்லாத பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு நடைபெற்ற மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்சில் டீம் சீ சக்தி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த 'தொடர்பாடல்' பரிசை வென்றதன் மூலம் வரலாற்று மைல்கல்லை எட்டியது. போட்டியில் 10 நாடுகளில் உள்ள 17 அணிகளில் சீ சக்தி மிகவும் பிரபலமானது. "மொனாக்கோ டவுன் ஹால் கோப்பை" பெற்றதைத் தவிர, இரண்டாவது ஆண்டாக ஒட்டுமொத்த தரவரிசையில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு, தகவல்தொடர்பு பரிசைத் தக்கவைத்துக்கொள்வதோடு, வெற்றி மேடைக்கு செல்லவேண்டும் என இந்த சீ சக்தி குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.



இதன் முதற்கட்ட சோதனைகள் கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது. அடுத்து பாண்டிச்சேரியில் நடக்கவுள்ளது. அதன் பின்னர் இந்த குழுவினர் ஜூன் மாத இறுதியில் மொனாக்கோ சென்று போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...