வரும் 10 ஆம் தேதி மேட்டுப்பாளையம் வருகிறார் பிரதமர் மோடி..!

கோவை, நீலகிரி, பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி,  மேட்டுப்பாளையத்தில் நடக்கவிருக்கும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்னை, நீலகிரி, வேலூரில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுப் பயணம் விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், திருத்தப்பட்ட சுற்றுப் பயணம் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நாளை உத்தரபிரதேசம் மாநில பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.45 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காடுக்கு செல்கிறார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார். சென்னையில் ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக சார்பில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். 

பின்னர், அன்றைய தினம் இரவு சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்கும் பிரதமர், அதற்கு மறுநாள் சென்னையில் இருந்து வேலூருக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு கேட்டு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோவை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அங்கு பிரசாரத்தை முடித்த பின்னர், மராட்டிய மாநிலத்துக்கு மாலை 6 மணிக்கு சென்றடைகிறார். 

மீண்டும் 12 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் அவர் சென்றிடாத வேறு சில தொகுதிகளில், பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...