காங்கேயத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு வழங்கி போக்குவரத்து காவல்துறை வரவேற்பு

போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் லட்டுகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் தலைமையில் லட்டுகளை வழங்கி ஊக்குவித்தனர்.



இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து போலிசார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் நெடுஞ்சாலை மற்றும் சிக்னல்களில் வெயிலில் அயராது பொதுமக்களுக்காக உழைக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு தாகத்தை குறைக்கும் வகையில் இளநீர் வழங்கப்பட்டு‌ காவலர்களையும் உற்சாகப்படுத்தப்பட்டது. காங்கேயம் ரவுண்டானா, கரூர் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு லட்டுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...