தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் தாராபுரத்தில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே உள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடிக்கம்பம், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. அரசு பொதுச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள்,கொடிகள் போன்றவை வரையப்பட்டிருந்தால் அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள். அரசியல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை, காந்திசிலை, உடுமலை ரோட்டில் உள்ள பெரியார் சிலை, 5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே கட்சியினர் சுவர் விளம்பரங்கள், மேலும் வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...