இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சென்னையில் வரும் ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.

தமிழ் மொழி: தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நாடறிந்த நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், நூல்களை பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

"இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...