ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றிய திருமூர்த்தி-சாந்தி தம்பதியினரிடமிருந்து 21 லட்சம் ரூபாயை வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் பகுதியில் வசித்து வந்த திருமூர்த்தி-சாந்தி தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களாக எலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டு சேர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏலச்சீட்டை நிறுத்துவதாகவும் தங்களால் நடத்த முடியவில்லை எனவும் தங்கள் கட்டிய பணத்தை வீட்டை விற்று ராம் லட்சுமி என்ற வழக்கறிஞர் மூலம் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீடு விற்ற பணத்திலிருந்து ராம் லட்சுமி ஆபிஸில் வைத்து 17 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதாகவும், மேலும் 26 பேருக்கு 21 லட்சம் ரூபாய் வரை தரவேண்டிய நிலையில் பணம் தர முடியாது என தெரிவிப்பதாகவும் இது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தையும் வாங்கி தர வேண்டும் என அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...