உடுமலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - 238 வழக்குகளுக்கு தீர்வு

தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும் ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலுக்கா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேசனல் லோக் அதாலத்) நடைபெற்றது. 3 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், மடத்துக்குளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.விஜயகுமார், உடுமலை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



அதன்படி தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்கு 57 ல் 57 வழக்குகள் ரூ. 3 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், இதர சிவில் வழக்கு 25 ல் 11 வழக்குகள் ரூ.3 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரத்து 884 க்கும், ஜீவனாம்ச வழக்கு 3 ல் ஒரு வழக்கு ரூ.20 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் 840 வழக்குகள் எடுக்கப்பட்டு 238 வழக்குகளுக்கு ரூ.7 கோடியே 45 லட்சத்து 61 ஆயிரத்து 784 க்கு தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...