வால்பாறை அருகே கருமலை எஸ்டேட்டில் பகுதியில் காட்டுத் தீ - நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறை அணைப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதிக்குள் அத்துமீறி பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஆறுகளில் தண்ணீர் வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது. வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட்டில் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள எஸ்டேட் வனப்பகுதிக்குள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.



இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் இணைந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயணைத்தனர்.

தீயில் சுமார் 7 ஏக்கர் மதிப்புள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதிக்குள் அத்துமீறி பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...