கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பணிக் குழுக்களுக்கான பயிற்சி கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணிக் குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?, அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் என்னென்ன? கட்சியினரையும், பொதுமக்களையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் போலீசாரும் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக 90 குழுக்கள் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?, அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் என்னென்ன? கட்சியினரையும் பொதுமக்களையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தனி துணை ஆட்சியர் சுரேஷ், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...