குனியமுத்தூரில் நாளை (மார்ச்.6) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

குனியமுத்துார், கு.வடமதுரை மற்றும் கோவை மாநகர் மின் வாரிய அலுவலகங்களில் நாளை (மார்ச்.6) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் பங்கேற்கிறார். எனவே இதில் மக்கள் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் இன்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், கு.வடமதுரை மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் பங்கேற்கிறார். இதில் மக்கள் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் இன்று தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மின் வாரிய அலுவலகத்தில், நாளை (மார்ச்.6) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்பார்வை பொறியாளர் (மாநகர், பொறுப்பு) வசந்தமுரளி பங்கேற்கிறார். இதில் மக்கள் பங்கேற்று, தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை, நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் (மாநகர்) இன்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...