ஒழுசெய்யும் நீரை சேமிக்க மழை நீர் சேகரிப்பு திட்டதை அறிமுகப்படுத்திய கோவை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் அமைப்பு.

கோவையில் சுமார் 100 பள்ளிகளுக்கும் மேல் தொழுகைகள் நடைபெறுகிறது, இதில் சுமார் ஒருநாளைக்கு ஒழுசெய்யபட்ட தண்ணீர் 10 லட்சம் லிட்டர் கோவை நகர் பகுதிகளில் சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது.



தற்போதய வறட்சியால் நகர் பகுதி பள்ளிவாசல்களில் ஒழு செய்யக் கூட தண்ணீர் இல்லமால் தண்ணீர் வெளியே விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை தொடர்ந்து நடைபெறாமல் இருக்கவும், கோடை கால வறட்சியை சமாளிக்கவும் கோவை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் ஒரு புதிய திட்டத்தினை கையாண்டுள்ளது.

பள்ளிவாசலில் 5 அடி விட்டதில்,  12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் நீரை சுத்தம் செய்ய மழை நீர் சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. அந்த குழியில் தேவையான கற்கள், இன்னும் அதற்கு தேவையான பொருள்களை இட்டு வேலை நடைபெற்று வருகின்து. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.




இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா, ஒப்பணகார வீதி அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல், ஆர்.எஸ்.புரம் குர்ரதுல் அயன் பள்ளிவாசல்களில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது எனவும் மேலும் இந்த திட்டத்தினை கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கோவை மாவட்ட மக்கள் தொடர்பு செயலாளர் எம்.அப்துல் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....