தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது

மின்சாரம் தாக்கி ஏற்படுகிற விபத்துகளை தவிர்க்கவும், ரயில்வே மின்அமைப்புகளின் அருகில் செல்வதில் உள்ள அபாயத்தை விளக்கியும், சேலம் கோட்ட மின்பிரிவு 28.03.2017 முதல் 31.03.2017 வரை மேற்கொள்ள உள்ள மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (28.03.2017)   சேலம் கோட்ட அலுவலகத்தில் இருந்து மின்பாதுகாப்பு பிரச்சார ஊர்தியை (பாதுகாப்பு ரதம்) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை மின் பொறியாளர் திரு. எம். பிரபாகரன், இதர துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  



பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் பிரச்சார பிரசுரங்களை வெளியிட்டார்.  இப்பிரச்சார ஊர்தி மூலம் சுமார் 1,00,000 பேரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 10,000 துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 2500 கேலண்டர்களை விநியோகிக்கவும், பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 1000 ஜியோமெட்ரி பாக்ஸ்களை பள்ளிக்குழந்தைகளுக்கு விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 



பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கைகளையும் தாண்டி, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயில்வே வளாகங்களில் உள்ள 25000 வோல்ட் மின்சக்தி அமைப்புகளின் அருகில் செல்வதால் விபத்துக்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றது 



நிகழ்ச்சியில்  திரு ஹரிசங்கர் வர்மா பேசுகையில் சேலம் கோட்டம் வருமுன் காக்கும் கொள்கையை நம்புவதாகவும், ரயில்வே மற்றும் சாலை உபயோகிப்பாளர்களை சந்தித்து பாதுகாப்பாக அவற்றை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதனால் பல்வேறு உயிர் மற்றும் பொருள் சேதத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.  அத்துடன், 2017ம் ஆண்டில் 2017ம் ஆண்டில், சேலம் மார்க்கெட் ரயில்நிலையம் மற்றும் மேட்டூர் அணை ரயில்நிலையங்களில் இரு மின்விபத்துக்களில் இருவர் சிக்கி மின்அதிர்ச்சிக்கு ஆளாகி உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை தந்ததாகவும் கூறினார். குழந்தைகளுக்கு பள்ளிகளில் அறநெறிக் கல்வியுடன் இத்தகு பாதுகாப்பு பற்றிய கல்வியும் தரப்பட்டால், அவர்களது வருங்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் என்றும், இத்தகு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் கோட்ட மின்பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....