உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உடுமலையில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே இன்று வரையிலும் நடைபெற்று வருகிறது. புதிதாக எந்த திட்டமும் திமுக ஆட்சியில் தொடங்கப்படவில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மண்டல பொதுமக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற திமுக அரசை கண்டித்தும், தமிழக மக்களை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடத்தும் மத்திய அரசை கண்டித்தும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.



பிரச்சாரத்திற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை விகித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் உடுமலை நகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக உடுமலை நகராட்சிக்கு கழிவு நீர் அகற்றும் வாகனம், எக்ஸ்கவேட்டர் லோடர் வாகனம், ரோபோட்டிக் எந்திரம், நகராட்சி அலுவலகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி நினைவுதூண் அமைத்தல், கூடுதல் பேரும் நிலையம் அமைத்தல், தங்கம்மாள் ஓடை பகுதியில் நடைபாதை மற்றும் தடுப்புச் சுவர் கட்டுதல்,கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் நடை பாதை மற்றும் தடுப்பு சுவர் கட்டுதல், ராஜேந்திரா சாலையில் நகராட்சி சொந்தமான வாரச் சந்தை மேம்படுத்தும் பணி, அண்ணா பூங்கா, ஜிடிவி நகர், ஸ்டேட் பேங்க் காலனி, சாத்விக்நகர், ராஜலட்சுமிநகரில் பூங்கா அமைக்கும் பணி, திருப்பூர் ரோடு, தளிரோடு, எலையைமுத்தூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, பழனி-பொள்ளாச்சி ரோடு மற்றும் தாராபுரம் ரோடு பகுதியில் மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 4 கோடியே 88 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே இன்று வரையிலும் நடைபெற்று வருகிறது. புதிதாக எந்த திட்டமும் திமுக ஆட்சியில் தொடங்கப் படவில்லை என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் உடுமலை நகர, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...