சீமை கருவேல மரங்களை அகற்றிய கோவை மாநகர காவல்துறை



கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை களைவதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டுவரும் வேளையில், கோவை மாநகர போக்குவரத்து போலீசாரும் இந்த பணியை கையில் எடுத்துள்ளனர். 

நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி மண்ணை மலடாக்கும் எண்ணத்தில் அன்னியர்களால் நம் நாட்டில் விதைக்கப்பட்டவை சீமைக்கருவேலம். தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள நரசிம்பதி குளத்தை ஆக்கிரமித்து முளைத்துள்ள  இம்மரங்களை அகற்றும் முயற்சியில் தற்போது கோவை மாநகர போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் மற்றும் உதவி ஆணையர் மகுடபதி உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெடுத்த இந்த சமூக பணியை போக்குவரத்து ஆய்வாளர் (கிழக்கு) அய்யர் சாமி ஒருங்கிணைத்தார்.



இது குறித்து அய்யர் சாமி சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- 

கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் உள்ள குளங்களில் கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்தோம். என்னுடன் போக்குவரத்து ஆய்வாளர் (மேற்கு) சதாசிவம் மற்றும் சக போலீசார் இணைந்து பணியாற்றினர். 

இன்று காலை 7 மணியளவில் குளத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை அகற்ற ஆரம்பித்தோம். அம்மரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தற்போது அகற்றி வருகிறோம். இதுவரை 250-க்கும் மேற்பட்ட பெரிய சீமை கருவேல மரங்களையும், 200 கன்றுகளையும் அகற்றியுள்ளோம். தொடர்ந்து, மதியம் வரை இப்பணியை செய்கிறோம். 



சீமை கருவேல மரங்களை போலீசார் அகற்றுவது இதுவே முதல்முறை. தொடர்ந்து, கோவையின் பல இடங்களை ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றுவோம்.  இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, அதிகாலையில் போலீசார் குளக்கரையில் திரண்டதை பார்த்த அப்பகுதி மக்களை பரபரப்பு தொற்றிக் கொள்ள, போலீசார் சீமை கருவேல மரங்களை அகற்ற வந்ததை அறிந்த பின்னர் மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...