வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி- கவுண்டம்பாளையம் விஏஒ மீது கோவை ஆட்சியரிடம் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் விஏஒ வாக இருந்த போது லோகநாயகி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக திருவாடானை பகுதியை சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் விஏஒ வாக இருப்பவர் லோகநாயகி. இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை பகுதியில் விஏஒ வாக இருந்த போது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக திருவாடானை பகுதியை சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், 2021ம் ஆண்டு லோகநாயகி ராமநாதபுரம் மாவட்டத்தில் விஏஒ வாக இருந்த போது அவரும் அவரது மகன் எழில் பிரபாகரனும் சேர்ந்து, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தற்போது வரை வேலைக்கும் அனுப்பாமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக கூறினார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அவர்கள் திடீரென கிளம்பி கோவைக்கு வந்து விட்டதால் பல நாட்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் ஒருவழியாக லோகநாயகி கோவையில் பணிபுரிவதை தெரிந்து கொண்டு இங்கு வந்ததாகவும் அவரிடம் தான் கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் தர மறுத்ததாக கூறினார்.

பின்னர் இது பற்றி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் கவுண்டம்பாளையம் போலிசார் லோகநாயகி விஏஒ வாக இருப்பதால் இது குறித்து தாங்கள் விசாரணை நடத்த முடியாது என கூறி விட்டதாக தெரிவித்தார்.

3 வருடங்களுக்கும் மேலாக தனது பணத்தை பெறுவதற்கு போராடி வருவதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியராவது விஏஒ லோகநாயகியிடம் இருந்து தனது பணத்தை பெற்று தந்து அவர் மீதும் அவரது மகன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...