ஓசை அமைப்பின் சூழல் சந்திப்பில் உணர்ச்சிகர நாடகத்தால் வனப்பாதுகாப்பை உணர்த்திய சிறுவர்கள்!


ஓசை அமைப்பின் சார்பில்  சூழல் சந்திப்பு நிகழ்ச்சி மாதம்தோறும் இறுதி வாரம் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இம்மாதம் உலக வனநாள் சிறப்பு நிகழ்வாக ஓசூர் டி.வி.எஸ் அகாடமி பள்ளி மாணவர்களின் 'யானை காணாமல் ஆகிறது' எனும் நவீன நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் புவியரசு நாடகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 





நாடகம் துவங்கும் முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கு 'சோலைக்கடுகளை பாதுகாப்போம்' என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதன்பின்னர், ஓசூர் டி.வி.எஸ் அகாடமி பள்ளி மாணவர்களின் 'யானை காணாமல் ஆகிறது' எனும் நவீன நாடகம் நடைபெற்றது. நாடகத்தின் மையக்கருவாக காடுகளை அளிப்பதால் யானைகள் அழிந்து வருகிறது என்பதை மாணவர்கள் நாடகம் நிகழ்த்தினர். சிறப்பான கருப்பொருளும் மாணவர்களின் திறம்பட்ட நடிப்பும் பார்வையாளர்களை திகைக்க வைத்தனர்.



பின்னர், விழாவில் தலைமையுறை ஏற்று கவிஞர் புவியரசு பேசியது: 

நான் அடிப்படையில் ஒரு நாடக கலைஞன். என் பேச்சு,கவிதை எல்லாவற்றிலும் நாடகம் இருக்கும். ஆட்சிக்கு எதிராக நாடகம் மூலம் குரல் கொடுத்த சப்தர்ஹாஸ்மி நடு ரோட்டில் அடித்து கொல்லப்பட்டார். நாடாகத்திற்காகவே உயிரை விட்டவர் அவர். குழந்தைகள் மனதில் பதிவதை எவராலும் அழிக்க முடியாது. அந்த குழந்தைகளே மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியாக நாடகம் நடத்தியது பிரம்மிப்பாக உள்ளது. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்தே காடுகளும், விலங்குகளும் இருக்கின்றன. அதை அழிப்பதற்கு மனிதர்களுக்கு உரிமையில்லை. இந்த பூமித் தாயிடம் கடைசியாக ஒட்டி கொண்டவர்கள் மனிதர்கள். எனவே இயற்கையையும், வன விலங்குகளையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும், இவ்வாறு அவர் பேசினார். 



நிறைவாக நாடக அரங்கேற்றம் செய்த பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஓசை அமைப்பு சார்பில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாஸ், தமிழ் பேராசிரியர் திலீப், அவை நாயகன், சையது, ராக் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...