மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் மாநகராட்சி வரி செலுத்தாத 809 வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டல பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினாலும் மற்றும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளையும் கண்டறிந்து கடந்த 26.10.2016 முதல் 24.03.2017 வரை தெற்கு மண்டலத்தில் 379 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மண்டலத்தில் 131 குடிநீர் இணைப்புகளும், வடக்கு மண்டலத்தில் 133 குடிநீர் இணைப்புகளும், மேற்கு மண்டலத்தில் 63 குடிநீர் இணைப்புகளும் மற்றும் மத்தியம் மண்டலத்தில் 103 குடிநீர் இணைப்புகளும் என ஆகமொத்தம் 809 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சொத்து வரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே, வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...