கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சாலை மறியல்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை க அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போராட்ட குழுவினர், CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்.



அதற்கும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...