மோசடி புகார் விவகாரத்தில் MYV3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக கோவையில் குவியும் மக்கள்

மோசடி புகார் விவகாரத்தில் முதலீட்டாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், 50 லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதை உணர்ந்த MYV3Ads நிறுவனத்தார் தங்கள் முதலீட்டாளர்களைக் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திரள அறிவுறுத்தினர்.


கோவை: MYV3 Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் அண்மையில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், 50 லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதை உணர்ந்த MYV3Ads நிறுவனத்தார் தங்கள் முதலீட்டாளர்களைக் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திரள அறிவுறுத்தினர்.



அதன்படி இன்று (ஜன.29) காலை முதல் L and T பைபாஸ் சாலையில் மக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு வருவதால் அங்கு அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், இது எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நிறுவனம். எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் முகாந்திரம் இல்லாமல் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கு கூடியுள்ளோம் என்றனர். சில தனி நபர்கள் விளம்பர ஆதாயத்திற்காக இப்படி பொய் புகாரை கொடுத்திருப்பதாகவும், இதனால் முதலீட்டாளர்கள் கொதிப்படைந்து திரண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...