பவானி ஆற்றின் குறுக்கே கேளர அரசு அணை கட்ட தடையாணை வாங்க தமிழக அரசு தவறிவிட்டது- பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து, முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழு ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி மு க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தடுப்பணை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தடுப்பணை கட்ட தடையாணை பெறாத காரணத்தினால் கேரள அரசு மேலும் தடுப்பணைகள் கட்ட வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தடுப்பணைகள் கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பவானி ஆற்றில் கேரள அரசு தண்ணீர் எடுக்க எந்தவித வரையறையும் இல்லாத நிலையில், கேரள அரசு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

பவானி தடுப்பணை விவகாரத்தில் முறையாக வழக்கு நடத்தாத தமிழக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-ம் தேதி கோவையில் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.

மேலும் இந்த விவாகரம் தொடர்பாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் ஏப்ரல் முதல்வாரத்தில் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...