அப்பநாயக்கன்பாளையத்தில் மதுபானக்கடை அமைப்பதை தடுக்கக் கோரி சிபிஐஎம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

துடியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையினை இடமாற்றம் செய்து அப்பநாயக்கன்பாளையத்தில் அக்கடையினை அமைப்பதை தடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் சிபிஐஎம் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா கூறியுள்ளதாவது:-

துடியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதுபான கடை இடமாற்றம் செய்து கோவை மாநகராட்சி 4-வது டிவிசனுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் ஊர் பகுதியில் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இப்பகுதியில் ராம் லட்சுமி அப்பார்ட்பெண்ட், காளியமமாள் காலனி, கேப்டவுன், ஜல்லிக்காடு, பார்க்சிட்டி, அண்ணா நகர், எஸ்எம்டி நகர், கலைஞர் நகர், மெக்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி மக்கள் தற்போது மதுபானக் கடை அமையவுள்ள சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், அச்சாலையினை அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திவருவதால் மதுபானக் கடை செயல்படும் பட்சத்தில் சமூகவிரோத செயல்களால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 

எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையிலான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...