தாராபுரம் அருகே காற்றாலை நிறுவன லாரி மோதி மின்கம்பங்கள் சேதம் - சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள பகுதிகளில் இயங்கி வரும் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கரையூர் மற்றும் ஆலம்பாளையம் பகுதிகளில் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக மீண்டும் மில்லின் உதிரி பாகங்கள் ஆன இறக்கைகள் மற்றும் கோபுர தூண்கள் ட்ரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சாலை வழியில் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் காத்தாடியின் உதிரி பாகங்களை கனரக வாகனங்களில் தனியார் விண்டு மில் நிறுவனத்தினர் கொண்டு வந்தனர்.

அப்போது தாறுமாறாக கனரக வாகனங்கள் விண்டுமில் உதிரிபாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த போது கரையூர் காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின் கம்பங்களை உடைத்தும் பெயர்களை சேதப்படுத்தியது.

அதேபோல் கரையூர் கிராமம் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது அதுமட்டுமின்றி கரையூர் மற்றும் ஆறாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...