க்ளாக்கோமா என்னும் பார்வைத் திறன் குறைபாடு குறித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோவையில் விழிப்புணர்வு பேரணி

க்ளாக்கோமா (Glaucoma) என்பது ஒருவகையான பார்வைத் திறன் குறைபாடாகும். இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு தங்களது பார்வைத் திறனை இழந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாம் வாரம் க்ளாக்கோமா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்நோய் குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திடும் பொருட்டு இன்று கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற இதில், ஆர்விஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மேற்கு மண்டல காவல்துறை பொது ஆய்வாளர் ஏ.பாரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாவட்ட வருமான வரி அலுவலகம் முன்பு துவங்கிய இந்த மாணவர் பேரணி, ரேஸ்கோர்ஸ் வழியாக முக்கியப் பகுதிகளுக்குச் சென்று மீண்டும் வருமான வரி அலுவலகத்திலேயே நிறைவடைந்தது. இதில், கோவை கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்பின் தலைவர் மருத்துவர் டி.சந்திரசேகர், ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் எஸ்.கருணா, ஐஎம்ஏ செயலாளர் மருத்துவர் சி.பி.சண்முகசுந்திரம், ஐஎம்ஏ நிதித்துறை செயலாளர் மத்துவர் என்.சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



க்ளாக்கோமா குறித்து கோவை கண் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஸ்ரீஷ்குமார் கூறுகையில், உலகம் முழுவதும் க்ளாக்கோமாவால் 80 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு இந்நோய் உள்ளது. அதாவது இங்கு 12 மில்லியன் மக்கள் க்ளாக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறக்கும் குழந்தை, வயது முதிர்ந்தவர்கள் என இந்நோய் யாரையும் விட்டுவைப்பது இல்லை. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் 99 சதவிகிதம் நோயாளிகளுக்கு சிகிச்சை பயனளிப்பது இல்லை. 9 சதவிகித நோயாளிகளுக்கு சிகிச்சையின் மூலம் சிறிது முன்னேற்றம் ஏற்படுகிறது' என தெரிவித்தார்.



க்ளாக்கோமா நோய் இரண்டு வகைப்படும். அவை, தூரப்பார்வை இழப்பது, கிட்டப்பார்வை இழப்பது என்பது ஆகும். இதனால் நோயாளிக்கு கண் வலி, எரிச்சல் ஏற்படும். இதனை ஆரம்பகட்டத்தில் சரிசெய்யாவிட்டால் பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கோவை, அரவிந்த் கண் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் வி.நரேந்திரன் கூறுகையில், வருடத்திற்கு ஒரு முறை ஒரு குடும்பத்தினர் கண்டிப்பாக க்ளாக்கோமா குறித்தான கண் சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். இன்று நடைபெற்ற க்ளாக்கோமா குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மக்கள் முறையாக கண்களை பராமரித்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. க்ளாக்கோமாவினை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்தால் சரிசெய்துவிடலாம் என்பதை மக்கள் அரிய வேண்டும்' என்றார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...