தன்னார்வலர் மற்றும் மாநகராட்சியால் சுத்தமான கோவை செல்வ சிந்தாமணி குளம்

கோவையில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற குளங்களில் ஒன்று செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளம். இக்குளமானது கடந்த சில வருடங்களாக சரியான பராமறிப்பின்றியும், ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினாலும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.



இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.



அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 



மேலும், அப்பகுதியில், கழிவரை இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியிலும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.



இதனிடையே, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், குளம் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட வந்தநிலையில், கரையோரத்தில் செயல்பட்டு வரும் இரசாயன தொழிற்சாலையினால் தான் இக்குளம் அதிகப்படியாக பாதிக்கப்படுகிறது என அறிந்து அந்த தொழிற்சாலைக்கு நோட்டிஸ் கொடுக்கச்சொன்னார்.

மேலும், தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்ட கழிப்பறையில்லாதோர் பட்டியலைப் பெற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை பேற்கொண்டு தனித்தனி கழிப்பறைகளையும், பொதுக்கழிப்பறையும் கட்டித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...