பள்ளிவாசல் இடத்தில் கடைகள் அமைக்க எதிர்ப்பு - ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு

பள்ளி வாசல் இடத்தில் கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றி கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, பூ, பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதையும் தடுக்க கோரியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, பூ பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ள மனுவில், சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டி உள்ள நிலையில் தற்போது அந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகின்ற பணியை செய்து வருவதாகவும் இது சட்டத்திற்கு புறமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வெங்கட்ராமன் என்பவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தையும் வாங்கி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடைகளை கட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் அருகில் இருக்கின்ற இடம் கருவூலக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் செல்வாக்கை வைத்து அதனை ரத்து செய்து இருப்பதாகவும் இறந்தவர்களைப் புதைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்திற்காக கடைகளை வாடகைக்கு விட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும்படி அவ்வியக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...