தாராபுரம் அருகே தொடர் கோழி திருட்டில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே படுகை பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபட்டு வந்த கூலி தொழிலாளியை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: தொடர்ந்து சேவல் திருடு போவதாக சிவக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் சேவலை திருடிய கருப்பணன் மகன் முருகனை, தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே உள்ள படுகை பகுதியில் அடிக்கடி சேவல்கள் களவு போவது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று படுகைக்கை பகுதியில் சிவகுமார் என்பவர் தோட்டத்தில் இரண்டு சேவல்கள் திருட்டுப் போனதையடுத்து, இது குறித்து சிவகுமார் என்பவர் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சாரிடம் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபடும் நபர்களை குறித்து அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியை சேர்ந்த கருப்பணன் மகன் முருகன்( 55) கூலித் தொழிலாளி என தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஆய்வாளர் கருப்பணன் மகன் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...