பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓட்டுநர் தொழிற்சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஆட்டோகளுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வலியுறுத்தி கோவையில் போராட்டம்.

தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் "தமிழக அரசு 2019 மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழகத்தில் திருத்தங்களோடு அமல்படுத்த வேண்டும், அநியாய ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிட வேண்டும், செயலி வடிவில் இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், ஆட்டோகளுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வேண்டும், ஆட்டோக்களை போன்று கால் டாக்சிக்ளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசின் வரி வருவாயை உறுதி செய்ய வேண்டும், பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...