திமுக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது - வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

குடும்ப அரசியலை செய்து கொண்டு கொள்ளையடிக்க கூடிய கூட்டு குடும்பமாய் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செயல்பட்டு வருவதாக கோவையில், வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.


கோவை: சிறுபான்மையினர் குறித்த பட்டியல் வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு அளித்தார்.



சுக்ரியா மோடி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்க இருப்பதாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் சிறுபான்மையினர் குறித்த பட்டியல் வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்,



பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பயனடைந்து சிறுபான்மையினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் மேலும் மாவட்ட நிர்வாகம் சிறுபான்மையினர் அணிக்கு விழிப்புணர்வு செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்ததாக கூறினார்.

பிரதமர் கல்வித் திட்டம், பொருளாதரத்தில் மாவட்ட ஆட்சியர் கீழ் இருக்க அதிகாரிகள் முகாம் நடத்த வேண்டும் அது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பட்டியல் தரவில்லை என்றால் ஜனநாயக ரீதியாக போராடுவதாக கூறினார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினியை வாதத்தை உண்டாக்க திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. ஊழலுக்கு எதிராக பேச முடியாது, குடும்ப அரசியலை செய்து கொண்டு கொள்ளையடிக்க கூடிய கூட்டு குடும்பமாய் திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செயல்பட்டு வருகிறது.

கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்வதும், இஸ்லாமியர்கள் அல்லாஹு அக்பர் சொல்வதும்,கிறிஸ்தவர்கள் Praise The Lord சொல்வது வழக்கம் என்றார். அந்தந்த மதத்திற்கு ஏற்ப தங்கள் சந்தோஷத்தை வெளியிடுகிறார்கள் அதனை திமுக அரசியல் செய்து வருகிறது என்றார். அங்கிருந்த பாகிஸ்தான் வீரர்கள் ரன் அடிக்கும் போது மைதானத்தில் தொழுதார்கள்.

அப்படி பார்த்தால் இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 5 முறை அல்லாஹு அக்பர் என்று தொழுது வருகிறார். அதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் இந்திய தேசத்தில் அனைத்து மதங்களும் உண்டு,கும்பிடும் கடவுள் வழிமுறைகள் வேற வேற இருக்கலாம் என்றார்.

திருமாவளனை அயோக்கியன் என்று சொல்வதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார்.

திமுக இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இஸ்லாமியர்கள் திமுக ஏமாற்றுவதை உணர வேண்டும் என்று கூறினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...