கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தாராபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் அறிவுரையின் படி முறையான உணவை உட்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

தாராபுரம் அருகே பொன்னாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் செல்லாம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சின்னக்காம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.

முகாமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி தொடங்கி வைத்து 10 கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10 நபர்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

பிறகு அமைச்சர் கயல்விழி பேசியதாவது:-

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் அனைத்து மருத்துவர்கள் மக்களைத் தேடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களுக்கு நோய்கள் குறித்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த கொதிப்பு, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆகியவற்றை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஸ்கேன், இ.சி.ஜி. எடுக்கப்பட்டு உடல் நலம் குறித்து தெரிவிக்கப்படும்.

அதே போன்று கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சரியான காய்கறிகளை உட்கொண்டு முறையான காலத்தில் டாக்டர்கள் அறிவுரையின் பேரில் பரிசோதனை செய்து கொண்டு குழந்தைகளை நல்ல முறையாக பெற்று எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண் காட்சி மற்றும் ஊட்டசத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். அரசு வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில்

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரகள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 250 பெண்கள் உள்பட 600 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்யப்பட்டது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் கன்னீஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...