நாடகங்கள் நடத்த இலவச அரங்குகள் தேவை - நாடக கலைஞர்கள் கோரிக்கை

நாடகங்கள் நடத்துவதற்கு அரசுக்கு சொந்தமான அரங்கங்களை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும் என கோவையில் நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: நாடகம் பார்ப்பதில் குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவருவதாக நாடக கலைஞர்கள் வேதனை

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடந்த அக்., மாத நிகழ்ச்சியில், காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின், ஜூகல்பந்தி நகைச்சுவை நாடகம் நடந்தது.அதில், பங்கேற்ற நடிகர், நாடக கலைஞருமான காத்தாடி ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறும் போது, தற்போது சபாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில், 160 - 170 சபாக்கள் வரை இருந்தன. தற்போது, 12 சபாக்களாக குறைந்துள்ளன; இரண்டு சபாக்கள் சேர்ந்து நாடகம் நடத்தும் சூழல் உள்ளது.நாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்கள், 40 - 50 வயதானவர்களாக உள்ளனர்; இளைஞர்கள், குழந்தைகள் வருவதில்லை. 'டிவி', மொபைல்போன் உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் வர வைக்க, சிறந்த நாடகம் தயார் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.

ஒருமுறை அவர்கள் நாடகம் பார்த்தால், பிடித்து தொடர்ந்து பார்க்க துவங்குவர்.நாடகம் தான் அனைத்து கலைகளுக்கும் முன்னோட்டமான தாய். இதில் இருந்து தான் பல கலைகள் உருவாகின.தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில், அரசு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், அரசுக்கு சொந்தமான அரங்கங்களை, குறைந்த வாடகைக்கு அல்லது இலவசமாக நாடகம் நடத்த வழங்கலாம். இதன், வாயிலாக நாடக கலை வளரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...