கோவை முதல் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை ஜுலை முதல் துவக்கம்

கோவை முதல் கொழும்புவிற்கு நேரடியாக செல்ல ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது புதிய சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விளக்கக் கூட்டம் மார்ச் 15ம் தேதியன்று நடைபெற்றது. 

இதில், சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் உட்பட விமான சேவையின் அனைத்து மூத்த அதிகாரிகள் கூட்டத்தை விமான இயக்குநர் ஸ்ரீ ஜி.பிரகாஷ் ரெட்டி கூட்டினார். இந்திய விவகாரத்துறை மேலாளர் ஹரிதிப் சிங் பால், ஸ்ரீலங்கன் விமான சேவை சார்பில் பங்கேற்று தற்போது புதிதாக துவங்கவுள்ள கோவை முதல் கொழும்பு வரையிலான விமான சேவை குறித்து விவரித்தார்.

இந்த சேவை வரும் ஜுலை 15ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 1435/1535LT என்னும் கோவை- கொழும்புவிற்கான விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் செயல்படுத்தப்படவுள்ளது. 

மேலும், இந்த விமான சேவையை குளிர்காலத்தில் வாரம் முழுவதும் செயல்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக கோவை- கொழும்புவிற்கு நேரடி விமான சேவையாக துபாயை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர் ஆகிய விமானங்கள் சேவை அளித்து வந்தன. தற்போது புதிதாக அந்த சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...