விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுகிறது - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார்

கோவை மாவட்டம் கோட்டூர் மலையாண்டிபட்டினம், மதிப்பாதை வழிதடத்தில், கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதால், விவசாயம், நீர்நிலைகள்,கால்நடைகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதாகவும் இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவது சிமெண்ட் கால்கள் கட்டி இடையூறு செய்து வருவதாகவும் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...