கோவையில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கோவையில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கார் மோதி பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சியடையும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை வடகோவை பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.



இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் வேலைக்காக பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.



அப்போது கென்னடி திரையரங்கு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதி வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர் லீலாவதி மீது மோதியது.



இதில் லீலாவதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும் அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவ்விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...