வனப்பகுதிக்குள் தானியங்கி கேமிராக்கள் - அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை

வனப்பகுதிக்குள் உள்ள விலங்குகளின் பாதுகாப்பு கருதி அத்துமீறி நுழைபவர்களை கண்காணித்து அறிக்கை அளிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் அந்நியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா அறிவுரையின் படி வனத்துறை அதிகாரிகள் மூக்குருத்தி தேசிய பூங்கா வனச்சரகத்துக்குட்பட்ட முக்குருத்தி, தெப்பக்காடு, மற்றும் நிலக்கோடு பகுதிகளில் அதிரடியாக ரோந்து பணிக்கு சென்றனர்.

நாடுகாணி, கொலாரிப்பேட்டை, வெஸ்டன் கேட்ச்மென்ட், முக்குருத்தி உச்சிமுனை ஆகிய 4 வழித்தடங்களில் ஆயுதம் ஏந்திய ஜீப் மூலம் சென்று ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் உள்ள நாடு காணி, முக்குருத்தி தேசிய பூங்கா வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கொலாரிபேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அந்நியர்கள் பிரவேசம் உள்ளதா என்பவை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தினந்தோறும் சிறப்பு தணிக்கை நடத்தி தெப்பக்காடு புலிகள் கண்காணிப்பு மைய அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஊட்டி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் அந்நியர்கள் அத்துமீறி நுழையக்கூடாது எனவும் அப்படி நுழைந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...