குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி -  நீதிமன்றத்தில் ஆஜராக  சி.பி.சி.ஐ.டி நோட்டீஸ்

1997 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்தவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக சிபிசிஐடி போலிசாரால் சம்மன் அனுப்பபட்டது.


கோவை: கோவை செல்வபுரம் கல்லா மேடு மட்டசாலை பகுதியைச் சேர்ந்த முகமது அலி.இவரது மகன் அயூப் என்கிற அஷ்ரப் அலி (வயது 22)இவர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்த வழக்கிற்காக சென்னை சேர்ந்த சிபிசிஐடி சிஐடி போலீசார் இவரை தேடி கோவை வந்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் இருந்த நபர்களிடம் இதுதான் அசரப் அலி வீடா என்பதை உறுதி செய்து கொண்டு அவரது வீட்டின் சுவரில் தலைமறைவு குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டினர்.

மேலும் இவர் குறித்து செல்வபுரம் கல்லா மேடு பகுதியில் சிபிசிஐடி போலீசார் 5க்கும் மேற்பட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை வேப்பேரி காவல் நிலைய வெடிகுண்டு வழக்கில் 1997 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் வேப்பேரி காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் தரைமட்டமாகியது.

இதைத் தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்ற எண் 2996, 1997 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை இரண்டாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து இவருக்கு பிடிவாரண்ட் அளிக்கப்பட்டும் இவர் தலைமறைவாக பதுங்கி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

வருகின்ற 16 10 2023 காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜராக வேண்டும் என்று அயூப் என்கிற அஷ்ரப் அலி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் இதுபோன்ற தலைமறைவு குற்றவாளி என்று புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...